Wednesday, April 16, 2008

என் அம்மாவிற்காக.....

விடியல் தொட்டு பார்த்தும் சலிக்காதமுகம்.....


உதட்டோடு என்றும் ஒட்டிய புன்னகை.....(என்னை அர்ச்சிக்கும் பொழுது sorry- இது போகும் இடம் எனக்கும் தெரியாது )


ஆயிரம் வேலைக்கு இடையேயும் என்னுடன் அரட்டைக்கு ஆர்வம்.....


எனக்காக என் தப்புகளை தானதாக்கிக் கொள்ளும் உயர்ந்த உள்ளம்


பல நூறு சோகங்களுக்கு இடையேயும் என்னை சாந்தப் படுத்தும் அவளின் மடி...



என் ஒவ்வொரு அசைவும் அவள் நினைவில் அத்துப்படி....

இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் என்றோ படித்த sms என் நினைவை முட்டியது......

"ஆம் நான் கண்டவுடன் காதலை நம்புகிறேன்.... ஏனெனில்.....நான் பிறந்த அந்நாளில் இருந்தே என்னைத் தொட்டுத் தூக்கிய தாய்யை காதலிக்கிறேன்!!!! "
ஆம் நான் கதை கேட்ட அந்நாளில் இருந்து

அவளோடு நான் கதை அடிக்கும் இன்று வரை....

என் வாழ்வில் பல்வேறு பாத்திரங்கள் கொண்ட பெருமை அவளை மட்டுமே சேரும்....

என் வெற்றிகளுக்கு மனமார மகிழ்ந்து...

என் தோல்விகளின் பொழுது தட்டிக் கொடுத்து....

நான், நானாக இருக்கையிலேயே என் மேல் அளவில்லா அன்புக் கொண்டவள்.....

என்னை கண்டு அவள் சிந்திய ஓரிரு துளி ஆனந்தக்கண்ணீர்....

உதட்டில் சிரிபோடும் கண்களில் கண்ணீரோடும் என்னை கட்டி அணைத்த சில தருணங்கள்...

என் தாய் என் உயிர் தோழியாக உருக்கொண்ட பல சம்பவங்கள்.....

இவை அனைத்தையும் என் நெஞ்சில் சுமந்துக் கொண்டு....

தாயே..... உனக்காக இறுதியாக இரு வரிகள்...

"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை,உன்னை கை விடுவதும் இல்லை!!!!"

1 comment:

ponmozhi said...

my sweet heart.............ur kavithai is cho cute and it deeply emotional!!!! ennamma poornimaa.........