நீ இளைப்பாறும் நாட்களில் என்னுடன் கழிக்கும் ஒரு மணி நேரம் அல்ல......
உன் தலைக்கு மேல் வேலை இருக்கும் அந்த சில நாட்களில் உன் நினைவை என் முகம் கடந்து செல்லும் அந்த ஒரு நிமிடம்.....
பல நூறு ரூபாய் செலவில் உன் அன்பை பொழிய நீ தரும் பரிசுகள் அல்ல..... உன் கண்களில் என்றும் எனக்காக தோன்றும் அந்த பரிவு....
என் இன்பத்தருணங்களில் என்னை கட்டி அணைக்க நீட்டப்படும் உன் கரங்கள் அல்ல.....
என் துன்பத்தை துடைக்க எனக்காக காத்திருக்கும் உன் தோள்கள்....
என் ego வை தோற்கடிக்கும் உன் அன்பு....
என் தப்பைத் தட்டி கேட்க நீ என் மேல் ஏடுத்து கொள்ளும் உரிமை....
என் ஒவ்வொரு வெற்றியை கண்டு உன் உள்ளத்தில் தோன்றும் உண்மையான நெகிழ்ச்சி....
என் சிறு சிறு தோல்விகளுக்கும் உன்னுள் தோன்றும் துடிப்பு....
மனம் விட்டு பேசிய அந்த பல மணி நேரங்கள்....
சலிக்காத அந்த சின்ன சண்டைகள் இவை அனைத்தும் மேம்மேலும் எனக்கு கிடைக்க
காத்திருக்கிறேன்....
எதிர் பார்த்திருக்கிறேன்.....
இவற்றில் எது இல்லா விட்டாலும் நான் உன்னுடன் இருப்பேன்...
-உன் உயிர் தோழியாக....
ஏனெனில் எதிர்பார்ப்பின்றி வருவதே நட்பு என்று எவரோ கூறியது என் நினைவை முட்டியது...
சிறிது நேரம் சிந்தித்தேன்.....
ஆம் எதிர்பர்பின்றி ஓடும் வாழ்க்கை ஏமாற்றத்தை தராது.....
ஆனால் உண்மை அது எழுச்சியையும் தராது...
நினைவிருக்கட்டும்....என் அன்பு மழைக்கு உன் நெஞ்சில் என்றும் பஞ்சம் வராது...
மேற்கூறிய எதிர்பார்ப்புகள் என் நட்பிற்கு நான் கேட்கும் பதில் மரியாதை அல்ல...
நம் உறவின் எழுச்சிக்காக நான் இடும் கட்டளை...
மரியாதையாக அடிபணிந்து போ.....
-இப்படிக்கு
என்றும் உன்னை தொல்லை படுத்த துரத்தும்
உன் உயிர் தோழி
பூர்ணி:-):-):-)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment